இளமை FM உடன் இணைந்து கொள்ள..

Powered By | Ilamaifm Via Dream Vision

ஓ காதல் கண்மணி இசை விமர்சனம்
இசை: ஏ ஆர் ரஹ்மான்
பாடல்கள்: வைரமுத்து
இயக்கம்: மணிரத்னம்
 
1.ஏ.. சினாமிகா...
 
கார்த்திக் பாடியிருக்கும் இந்தப் பாடலின் மெட்டும் இசையமைப்பும் விண்ணைத் தாண்டி வருவாயா பாடல்களை நினைவூட்டுகிறது.

ஆனால் வைரமுத்துவின் வரிகள்தான் புரிந்து கொள்ள முடியவில்லை. சந்தத்துக்காக சொற்களைப் போட்டுவிட்டார் போலிருக்கிறது. அனாதிகா என்பது குழந்தைக்கு வைக்கும் பெயராக இருக்கலாம். ஆனால் இந்தப் பாடல் வரிகளில் அர்த்தமுள்ளதாக அமைந்திருக்கிறதா பாருங்கள்...
 
ஏ சினாமிகா..
சீறும் சுனாமிகா
நீ போனால்
கவிதை அனாதிகா...

2.தீரா உலா..
தர்ஷனா - நிகிதா காந்தி பாடியிருக்கிறார்கள். ஆயுத எழுத்தில் வரும் யாக்கைத் திரியின் எக்ஸ்டென்ஷனாகத் தெரிகிறது இந்தப் பாடல். டிஸ்கொதேக்களில் நீக்கமற நிறைந்திருக்கும் அளவுக்கு ஈர்ப்பாடன பாடல் இது.
 
3.காரா ஆட்டக்காரா காத்திருக்கேன்...
 
ஆர்யன் தினேஷ் கனகரத்னம், தர்ஷனா, சாஷா திருப்பதி பாடியிருக்கிறார்கள். பாடல் ஆரம்பத்தில் வரும் காரா ஆட்டக்காரா காத்திருக்கேன் மட்டும்தான் தெளிவாக காதில் விழுகிறது. மற்றபடி நமநம நமநம ஹே ஹோ.. தத்தத் தரகிட மோ மோ... போன்ற ஒலிகள்தான் பாட்டு முழுக்க. மெட்டும் பீட்டும் ஒரு காக்டெயில் மாதிரி கிறுகிறுக்க வைக்கிறது. கல்லூரி இளசுகளைக் குறிவைத்திருக்கிறார்கள். குறி தப்பாது என்றுதான் தோன்றுகிறது!
 
4.பறந்து செல்ல வா...
 
கார்த்திக், சாஷா திருப்பதி பாடியிருக்கிறார்கள். புத்தம் புது வெளி புத்தும் புது மொழி திக்கியது விழி தித்திக்குது வலி.. யோசிக்காதே போ.. யாசிக்காதே போ... -என்கிறார் பாடலில் வைரமுத்து. யோசிக்காமல் ஜஸ்ட் லைக் தட் கேட்க வேண்டிய பாட்டு. ஒலியமைப்பு, ரிதமில் புது ஜாலம் காட்டியிருக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.
 
5.நானே வருகிறேன்
 
சாஷா திருப்பதி, சத்ய பிரகாஷ் பாடியிருக்கிறார்கள் இந்தப் பாடலை. மெட்டும் இசையமைப்பும் மேற்கத்திய பாணியில் இருக்க, பாடல் வரிகளை சாஷா கர்நாடக பாணியிலும், சத்ய பிரகாஷ் ஹிந்துஸ்தானி பாணியிலும் பாடியிருக்கிறார். முதல் முறை கேட்கும்போது பெரிய ஈர்ப்பில்லை.
 
6.மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை..
 
சித்ராவும் ஏ ஆர் ரஹ்மானும் பாடியுள்ள இந்தப் பாடலின் வரிகளும் மெட்டும் மனசில் ஒட்டிக் கொள்கின்றன. சித்ரா பாடி முடிக்க, அங்கிருந்து அடக்கமாக ரஹ்மான் ஆரம்பித்து பாடலை முடிக்கும் விதம் அருமை. இந்த ஆல்பத்தின் பெஸ்ட் என்று கூடச் சொல்லலாம்.
 
7.மென்டல் மனதில்...
 
ஜோனிதா காந்தி குழுவினருடன் பாடியுள்ள இந்தப் பாடல் ஏற்கெனவே பாப்புலராகிவிட்டது. பாடல் வரிகளைப் பற்றி கவலையே படாமல் ஜஸ்ட் அந்த இசை அமைப்புக்காகவே கேட்கலாம்.
 
8.மௌலா வா சல்லிம்...
 
ஏ ஆர் ரஹ்மான் மகன் ஏ ஆர் அமீன் தன் மாசு மருவற்ற குரலில், இறைவனிடம் பேசுவதுதான் இந்தப் பாடல். பாரம்பரிய அரபு மொழிப் பாடலை அதே மெட்டை வைத்து தன் இசையமைப்பில் தந்திருக்கிறார் ரஹ்மான். பரவசம். மனசுக்கு மகிழ்ச்சியைத் தருவதுதான் இசை... அதை பூர்த்தி செய்கிறது ஓ காதல் கண்மணி இசை.

latest tamil news இயக்குனர் ஆனது ஏன்?- பா.விஜய் பதில்
2015-05-28 10:46:18
latest tamil news கல்யாணம் ஆகிவிட்டால் அம்மா வேஷம்தானா?- ஜோதிகா பாய்ச்சல்
2015-05-28 10:45:43
latest tamil news தனுஷ் ஜோடியாக மீண்டும் சமந்தா
2015-05-28 10:44:57
latest tamil news நயன்தாரா படத்துக்காக ஓவியம் கற்றுக்கொண்ட ஆரி
2015-05-28 10:44:03
latest tamil news மோகன்லால் என்னை நல்லா யூஸ் பண்ணினார்: சரிதா நாயரின் பரபரப்பு குற்றச்சாட்டு
2015-04-09 07:12:30
latest tamil news 30 வருஷமா என் கணவர் கொடுமையை தாங்கினேன்: ரஜினி, கமல் ஹீரோயின் உருக்கமான பேட்டி
2015-04-09 07:11:56
latest tamil news விஷாலுடன் மீண்டும் ஜோடி சேரும் மீரா ஜாஸ்மின்
2015-04-09 07:11:19
latest tamil news ரஜினியை இயக்க சுந்தர் சி-க்கு மீண்டும் வாய்ப்பு
2015-04-09 07:10:50
latest tamil news நிழல்கள் வெற்றி பெற்றிருந்தால் உலக சினிமா பக்கம் சென்றிருப்பேன்! - பாரதிராஜா
2015-04-09 07:10:04
latest tamil news இயக்குநர் ரேவதி மீண்டும் பராக்… பராக்
2015-04-06 20:51:00
latest tamil news நயன்தாரா சம்பளம் இப்போ எவ்ளோ தெரியுமா?
2015-04-06 20:46:46
latest tamil news கொம்பன் கார்த்திக்காக குடும்பத்தோடு வீட்டை காலி செய்த நண்பர்
2015-04-05 19:12:26
latest tamil news சிற்பியாக நடிக்கும் மம்முட்டி... கமலுடன் இணைகிறார்
2015-04-04 23:56:51
  • 1418228256_Chengappa_New_Photos_(8).jpg- latest gallery
  • 1387240540225)_--_edit.jpg- latest gallery
  • 1411081043Sharma-Glamorous-photos-004.jpg- latest gallery
  • 1390258605.jpg- latest gallery
  • 1389139470ss_Samantha_Latest_Hot_Photo_Gallery_CelebsNext_0002.jpg- latest gallery