Settai
Production :- UTV Motion Pictures
Director :- R. Kannan
Music :- Thaman.S
Actors :- Arya,Anjali,Santhanam,Premji Amaren,Hansika Motwani

தமிழ்சினிமாவின் வெயிட்டான கூட்டணி எச்சம் இது. ஆர்யா, சந்தானம், ஹன்சிகா மோத்வானி, அஞ்சலி என்று மார்க்கெட்டில் சுட சுட விற்கப்படும் இவர்களின் கால்ஷீட்டை வைத்துக் கொண்டு இப்படி ஒரு நாராசமான படம்?

எம்ஜிஆர் கமல் காலத்திலிருந்தே நாமெல்லாம் பார்த்துவரும் கதைதான். இந்த கதைக்கு எதற்காக மெனக்கட்டு இந்தி படத்தின் ரீமேக் ரைட்ஸ் வாங்கினார்களோ? ஆள் மாறாட்டம் போல, பார்சல் மாறாட்ட கதைதான் இது. வழிமாறி போய்விடும் பார்சலால் ஏற்படும் அவஸ்தைதான் படம் என்றாலும், மாறிப் போகிற பார்சல் எது என்பதில்தான் பிரச்சனையே! சந்தானத்தின் கக்காவும், கோடிக்கணக்கான மதிப்புள்ள வைரமும் இடம் மாறி பார்சல் ஆகிவிடுகிறது. வில்லன் நாசர் பார்சல் செய்தவர்களை பார்சல் செய்ய துடிப்பதுதான் க்ளைமாக்ஸ். படம் நெடுகிலும் ஒரே துர்நாற்றம். இனிமேல் சந்தானத்தை பார்க்கிற இடத்திலெல்லாம் ஒரு பார்சல் கொடுக்கலாம். அவ்வளவு வெறி வருகிறது நமக்கு.

மும்பை பத்திரிகை அலுவலகத்தில் வேலை பார்க்கிறார்கள் ஆர்யா, சந்தானம், பிரேம்ஜி, மற்றும் அஞ்சலி ஆகியோர். ஏர் ஹோஸ்டஸ் ஹன்சிகா ஆர்யாவின் காதலி. அஞ்சலிக்கும் இவர் மீது ஒரு கண். இந்த நேரத்தில் வைரம் கடத்துகிற கோஷ்டியால் ஹன்சிகாவின் தோழிக்கு போக வேண்டிய டப்பா ஹன்சிகாவின் பொறுப்புக்கு வருகிறது. இதை போகிற வழியில் இந்த அட்ரசுல சேர்த்துடேன் என்கிறார் தோழி. ஹன்சிகாவோ அந்த பொறுப்பை ஆர்யாவிடம் கொடுக்க, ஆர்யாவோ சந்தானத்திடம் கொடுக்க, மோஷன் டெஸ்ட்டை லேபுக்கு கொடுத்தனுப்பும் சந்தானம், கூடவே இந்த டப்பாவையும் பிரேம்ஜியிடம் கொடுக்கிறார். அவர் அவற்றை இடம் இடம் மாற்றி கொடுத்துவிடுகிறார். கக்காவை வைரம் என்று நினைத்து பிரித்துப் பார்க்கும் நாசரின் நோஸ்(சர்), பல்சர் பைக்கின் புகைப்போக்கி போலாகி வெப்பத்தை உழிழ்கிறது. சம்பந்தப்பட்டவர்களை தேடுகிறது வில்லன் கோஷ்டி.

கிடைத்தவர்களை போட்டு வறுத்தெடுத்து வைரத்தை கைப்பற்ற நினைக்க, வைரம் மீண்டும் ஆர்யா அண் கோவிடம் வந்து சேர, ஒரே சேசிங். கடைசியில் என்னாச்சு என்பதை ஒரு உப்புசப்பும் இல்லாமல் முடித்து... ஓ...வ்வேவேவ்! படம் அருவறுப்பின் உச்சம்.

படத்தின் ஒரே ஆறுதல் ஹன்சிகா. ஏன் எதற்கு என்றே தெரி

யாமல் இவரை ரசிக்கலாம். அவரது காஸ்ட்யூம்களும் கலரும் சற்று ஒல்லியாகிவிட்ட தேகமும் படம் முழுக்க அவர் வருவாரா என்றே ஏங்க வைக்கிறது. ஆனாலும் இவரது கேரக்டர் தமிழ்சினிமாவுக்கேயுரிய லு£சுப்பெண் கேரக்டர்தான். அவ்வளவு கேடுகெட்ட ரூமில் தங்குகிற ஒருவனை காஸ்ட்லி காரை பரிசாக அளித்து காதலிக்கிறார்.

என்னாச்சு அஞ்சலிக்கு? மிக மோசமான மேக்கப். எப்போதும் தூங்கி வழிந்த ஃபீலிங். அவர் ஆர்யாவுக்கு கொடுக்கும் மிக நீண்ட லிப் கிஸ் கூட ஒரு கிக்கும் ஏற்படுத்தவில்லை ரசிகர்களுக்கு. இப்படியே நிலைமை போனால், அஞ்சலியின் வெற்றிக்கு அஞ்சலி போஸ்டர் ஒட்ட வேண்டியதுதான்.

சந்தானம்...! இந்த படத்திற்காக வசனத்தை நாலு முறை அடித்து திருத்தி எழுதியதாக பிரஸ்மீட்டில் பிரஸ்தாபித்தார்கள். என்னத்தை எழுதினாரோ? சறுக்கலை சட்டை பாக்கெட்டில் வைத்து கொண்டே அலைகிறீர்கள் சந்தானம். கவனம்...

ஆர்யாவெல்லாம் எப்படிதான் முதல் ஐந்து இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறாரோ? அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். நடிப்பும் வரவில்லை. நடமாடும் பீரோ போல ஒரு பாடி லாங்குவேஜ். ஹ்ம்ம்ம்?

இவர்களே இப்படியென்றால் பிரேம்ஜியை பற்றியெல்லாம் எழுதுவதே அதிகம். எவ்வளவுதான் முயன்றாலும் அந்த அகலமான அண்டார்டிகா வாயிலிருந்து வரும் ஒரு காமெடிக்கு கூட சிரிக்க முடியவில்லை. துரதிருஷ்டம். பிஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு அருமை. பாடல் காட்சிகளில் இன்னும் விசேஷமாக மெனக்கெட்டிருக்கிறார்.

எஸ்.எஸ்.தமன் இசை. அகலாதே... என்கிற ஒரு பாடல் சூப்பர். இந்த ஒண்ணாம் நம்பர் படத்திற்கு மூன்று பேர் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். அதில் தயாரிப்பு நிர்வாகி தனஞ்செயனும் ஒருவர். (வௌங்கினாப்லதான்) சமீபத்தில் உலவி வரும் பேரதிர்ச்சி தகவல் ஒன்று. இப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் வரவிருக்கிறதாம்.

இந்த சேட்டைதான வேணாங்கறது!

Download Settai  MP3 Songs