Annakodiyum Kodiveeranum
Production :- P. Bharathirajaa
Director :- Bharathiraja
Music :- G. V. Prakash Kumar
Actors :- Lakshman,Karthika,Manoj, Iniya

இயக்குனர் இமயம் பாரதிராஜா ரொம்ப நாளைக்குப்பிறகு பார்த்துப் பார்த்து செதுக்கிய படம் ‘அன்னக்கொடி’… ஆரம்பத்தில் ‘அன்னக்கொடியும் கொடிவீரனும்’ என பேர் வைத்தார்கள்… இடையில் என்ன நடந்ததோ ‘கொடிவீரன்’ கட் ஆகிப் போனார்…

தலைப்பில் மட்டுமல்ல படத்திலும் நடிக்க முதலில் பார்த்திபனை கமிட் செய்து போட்டோ ஷுட் எடுத்த நிலையில் அவரை கழற்றி விட்டு இயக்குனர் அமீரை ஒப்பந்தம் செய்தார். அமீரை மதுரையில் ஷூட்டிங் நடத்த அழைத்துச் சென்று தொடக்கவிழாவிலெல்லாம் பந்தாவாக அறிமுகம் செய்த நிலையில் திடீரென படத்தில் இருந்து அமீரை தூக்கினார் பாரதிராஜா. ஏன் இந்த மாற்றம் என இன்று வரை யாருக்கும் புரியவில்லை.

இந்நிலையில் புதுமுகத்தை ஹீரோவாக போட்டு ராதாமகள் கார்த்திகாவை ஹீரோயினாக வைத்து ‘அன்னக்கொடி’யை உருவாக்கியிருக்கிறார் பாரதிராஜா. மொத்த படத்தையும் மதுரையையும், அதை சுற்றிள்ள பகுதிகளிலுமே படமாக்கி முடித்திருக்கிறார்.

சரி படக்கதைதான் என்ன…?

செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனான ஆடு மேய்க்கும் லஷ்மண். இவனுக்கும் சாராயம் காய்ச்சுபவரின் மகளான ஆடு மேய்க்கும் கார்த்திகாவுக்கும் காதல்.

ஊருக்குள் வட்டிக்கு பணம் கொடுத்து நாட்டாமை செய்து வரும் மனோஜ்குமார் மகன் மனோஜூக்கு கார்த்திகா மேல் ஒரு ஈர்ப்பு…

ஆடுமேய்க்கும் ஹீரோவின் காதல் ஜெயித்ததா… வில்லனான மனோஜ் நினைத்தது நடந்ததா என்பதுதான் ‘அன்னக்கொடி’ கதை.

இதற்கு மேல் கதையை விவரிக்க முடியாது… ஏன்னா படம் தொடங்கினதில் இருந்து முடியிற வரைக்கும் கதையை தேடித் தேடி புடிச்ச வரிகள்தான் மேல நீங்க படிச்சது…

‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் ராதாவை அறிமுகப்படுத்தி இயக்குனர் இந்த படத்தில் அவரின் மகள் கார்த்திகாவையும் நடிக்க வைத்திருக்கிறார்.

மார்டன் பெண் கார்த்திகாவை ஜாக்கெட் இல்லாமல் நடிக்க வைத்து பெறாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வைக்கும் அளவுக்கு நடிப்பில் வேலை(?) வாங்கியிருக்கிறார்… இயக்குனர். ஒரு சூழலில் கார்த்திகாவை முக்கால் நிர்வாணமாக ஓடவிட்டும் ரசிகர்களை குஷிப்படுத்த நினைத்திருக்கிறார்….

கிராமத்து மைனர்களை வளைத்து காசு பார்க்கும் மீனாளுக்கும் ஜாக்கெட் இல்லா கெட்டப்தான்… மீனாள் தொடர்புடைய சில காட்சிகளை சென்சார் கத்திரி எப்படி வெட்டாமல் விட்டது என்பது இயக்குனருக்கே வெளிச்சம்…

இயக்குனர், தயாரிப்பாளர் அவதாரங்களில் வலம் வந்து கொண்டிருந்த மனோஜ்குமாரை இந்த படத்தில் மருமகளையே மடக்க நினைக்கும் மாமனாராக நடிக்க வைத்து ஆபாசத்தின் உச்சத்திற்கு அழைத்து சென்றிருக்கிறார் இயக்குனர்…

இயக்குனர் பாரதிராஜா தனது மகன் மனோஜ் கே.பாரதியை இதற்கு மேல் கேவலப்படுத்த முடியாது… அந்தளவுக்கு படத்தில் மிக கேவலமான கேரக்டரை கொடுத்திருக்கிறார்…

லஷ்மணன் தேனியை சேர்ந்த இவருக்கு இதுதான் அறிமுகபடம்… முதல் படத்திலேயே இயக்குனர் இமயத்தின் பின்னணியில் அறிமுகம் ஆகியிருக்கிறார்.

ஜிவி பிரகாஷ் இசையில் ஒரு பாடலும் மனசில் நிற்கவில்லை. படத்தின் பின்னணி இசை பல இடங்களில் கேட்கவே இல்லை… டப்பிங் பேசியவர்களை இயக்குனர் சரியாக வேலை வாங்கவில்லை போலும்… பேசியவர்கள் பலரும் கடமைக்கு பேசியதால் பல வசனங்கள் கேலிக்கூத்தாக மாறுகிறது…

சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு மட்டுமே பேசப்படும் அளவுக்கு இருக்கிறது. மொத்தத்தில் ‘அன்னக்கொடி’ வெற்றிக்கொடி நாட்டுவது கஷ்டம்…!

- See more at: http://www.aanthaireporter.com/?p=35601#sthash.b8xzDsyW.dpuf

Download Annakodiyum Kodiveeranum  MP3 Songs